உலகம்

சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியில் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியில்

Oplus_0

கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியினால் தொழிலை மேம்படுத்துவதற்கான அதிகப்படியான கடன் வழங்கும் திட்டம் இன்று (17) வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது லக்ஜே திட்டத்தின் மூலம் சுமார் 10 இலட்சம் ரூபாய் பணத்தை தொழிலை மேம்படுத்தி, அத்தொழிலை சிறப்பாகக் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டது.

அந்தவகையில், சாய்ந்தமருதைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி மீரா முகைதீன் பஸீல் என்பவர் தனது தச்சுத்தொழிலை மேம்படுத்துவதற்காக இவ்வாண்டின் முதலாவது அதிகப்படியான கடன் திட்டத்தைப் பெற்றார்.

சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், 

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் மற்றும் சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா, சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எ.எம்.எம். றியாத், வலய உதவி முகாமையாளர் நௌஷாத், சமூர்த்தி வங்கி காசாளர் எம்.பீ.எம். அன்லைஸ் உட்பட பலரும் கலந்து கொண்டு இக்கடனை வழங்கி வைத்தனர்.

சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த மீளாய்வுக் கூட்டமும் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button