நகையை ஒப்படைத்த நிருபர்களுக்கு பாராட்டு

காவல் துறையில் நகையை ஒப்படைத்த பத்திரிக்கை நிருபருக்கு DSP பாராட்டுகள்!!

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் திவ்யா பாரதி. இவர் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் செயல்படும் கனரா பேங்கில் தனது நகையை அடகுவைக்க போகும் போது நகை தொலைந்துவிட்டது. அக்கம், பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த வழியாக வந்த முதுகுளத்தூர் பத்திரிக்கை நிருபர்கள் முருகபூபதி, சத்தியேந்திரன், ஆகிய இருவரும் கீழே கிடந்த நகையை எடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்தனர் யாரும் இந்த நகை எனக்கு சொந்தமில்லை என்று கூறியவுடன் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்தனர். தொலைந்த நகையை கண்டுபிடித்து கொடுத்ததற்காக முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் நிருபர்களுக்கு பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.




