இராமநாதபுரம்

SDPI கட்சி நிர்வாகிகளுடன் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைபேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!!

SDPI கட்சி நிர்வாகிகளுடன் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை
பேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!!


இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் , முதுகுளத்தூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் வெறிநாய்களின் அட்டூழியத்திற்கு எதிராக , பேரூராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் நாளை வெகு எழுச்சியுடன் நடைபெற இருந்த , நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் அவர்கள் அழைப்பின் பேரில் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் J.பாஞ்சுபீர் அவர்கள் தலைமையில் SDPI கட்சி நிர்வாகிகள் பேரூராட்சி தலைவர் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு மாத காலத்திற்குள் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் அனைத்து தெரு நாய்களுக்கும், நாய்கள் இனப்பெருக்க தடுப்பூசி மற்றும் ரேபீஸ் நோய் தடுப்பூசி போடப்படும் என்று பேரூராட்சி தலைவர் உத்திரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

அதனடிப்படையில் SDPI கட்சி சார்பில் முதுகுளத்தூரில் நடைபெறுவதாக இருந்த பேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

சமாதானக்கூட்ட நிகழ்வின்போது, SDPI கட்சி மாவட்ட துணைத்தலைவர் மௌலவி I.மீரான் முஹைதீன் மன்பஈ , மாவட்ட பொருளாளர் M.செய்யது சதக்கத்துல்லா, பொறியாளர் அணி சுல்தான் சம்சுதீன் , முதுகுளத்தூர் நகர் தலைவர் M.காதர் சுல்தான், நகர் செயலாளர் ரம்ஜான் அலி, நகர் பொருளாளர் முஹம்மது இப்றாகிம், நகர் செயற்குழு உறுப்பினர் அஸ்ஹாருதீன் , முன்னாள் நகர் தலைவர் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button