கூரியூர் ஜமாஅத்தில் ஆலோசனைக் கூட்டம்

கூரியூர் ஜமாஅத்தில் ஆலோசனைக் கூட்டம்

இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு BCM பிரிவு வழங்க 2024-ல் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ததற்கு எதிராக மேல்முறையீடு செய்வது மற்றும் சட்டத்திருத்தம் கொண்டு வருவது குறித்து, இன்று இராமநாதபுரம் கூரியூர் ஜமாஅத் பள்ளிவாசலில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரையிலிருந்து வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு ஜமாஅத் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துகளை பதிவு செய்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- 2024 அரசாணையை ரத்து செய்ததற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
- தமிழ்நாடு முதலமைச்சர் சட்டத்திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் மொஹல்லா நிர்வாகங்கள் சார்பில் அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் விரைவில் சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.




