இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு விமானம் வந்த தகவல் தெரியாத நிலையில் பாதுகாப்பு ஊழியர்கள்

இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு விமானம் வந்த தகவல் தெரியாத நிலையில் பாதுகாப்பு ஊழியர்கள்

மதுரை :
மதுரை விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 15 ந் தேதி துபாயில் இருந்து பயணி ஒருவர் ஸ்ரீலங்கன் விமானம் மூலம் கொழும்பு வழியாக மதுரை சென்றார்.
விமானம் 16 ந் தேதி மதியம் 2.30 மணியளவில் மதுரை சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தது. அப்போது ஏரோ பிரிட்ஜ் திறக்கப்பட்டு பயணிகள் வெளியே வந்தனர்.
எனினும் இமிக்ரேசனுக்கு செல்ல வேண்டிய கதவு திறக்கப்படவில்லை. இதனை பாதுகாப்பு ஊழியர்கள் தான் திறக்க வேண்டும். இதனால் பயணிகள் 15 நிமிடம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்ட போது விமானம் வந்தது தங்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை என கூறினர்.
இது தொடர்பாக மதுரை விமான நிலைய அதிகாரிகளுக்கு ஈ மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த ஊழியர்கள் விமான நிலைய துறைகளுக்கு ஏற்பட்ட தகவல் தொடர்பு குறைபாட்டால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை உறுதி செய்துள்ளது.
மேலும் இதுபோன்ற நிலை எதிர்காலத்தில் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தி பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.




