கவிதைகள் (All)

வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக…

வெளிநாட்டில்
வாழும்
உறவுகளுக்காக…

அன்னத்தில்
கை
வைத்தேன்.

என்
எண்ணம்
எங்கோ…
செல்கின்றதே…

நான்
நடை பழகிய
நாடு எங்கே…

என்
தலை வருடி
தண்ணீர்
தரும்
தாய் எங்கே…

உழைத்து வியர்த்து வந்தாலும்
உரிமையோடு
தம்பி
என்றழைக்கும்
தந்தை எங்கே…

அன்பைப்பரிமாறி
ஆசையோடு
இதழ் பதிக்கும்
இல்லாள்
இங்கு
இல்லையே…

வாஞ்சையோடு
வந்து
வந்தனம்
செய்திடவும்..
உணவை
ஊட்டி
உற்சாகமடைந்திடவும்.

நான் பெற்ற
நளினங்கள்
எங்கே…

நான்
உண்ணும்
உணவில்
என்
விழியில்
கசிந்த நீர்..
விரல் வழியே
இறங்கி.
கவனம்
கொள்ளச்
சொல்கின்றதே…

அனைத்தையும்
துறந்து
பொருள் தேட
இங்கு வந்து

தூக்கம்
தொலைத்தேன்.
துன்பத்தால்
உளர்ந்தேன்.
நோய்
வந்தாலும்
பாய் விரிக்க
ஆளில்லாமல்..
பரிதவிப்பில் வாழ்ந்தேன்.

அனைத்தும்
எதற்கு
என்
அன்பு குடும்பத்தை
கரைசேர்க்க
மட்டுமே…

இறைவா…
உன்
உள்ளத்தில்
எனக்கு
இடம்தா.

இதமான
சுகம்தா.

தாய்
மண்ணை
விட்டு சென்ற
அனைவருக்கும்
பொருளையும் அருளையும் தா இறைவா…

அரும்பு கவி
அன்வர் உசேன்
தொருவளூர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button