கவிதைகள் (All)
தாயின் மறுவுருவாய்.
தாயின் மறுவுருவாய்.
அன்னையின்
அங்கமாய்
அவதாரம்
ஆனவளே.
ஆணிவேராய்
எனக்கு
அன்பை
பொழிபவளே.
தாயும்
தமக்கையுமாய்
மலர்ந்த
மரகதமே.
என்னுடைய
தாய்ப்பாசம்
உன்னிடம்
அடைக்கலமே.
உள்ளம்
மகிழ்ந்திடுமே
உன்முகம்
பார்த்ததுமே.
கள்ளம்
கபடமில்லா
கார்முகில்
என்மகளே.
பாசத்தில்
எனையாளும்
பைந்தமிழ்
நீதானே.
பார்புகழும்
தமிழ் மொழியின்
இலக்கணமும்
நீதானே.
அன்னையின்
சாயலில்
உன்னையேக்
காண்கின்றேன்.
உன்மடியுறங்கி
உற்சாகம்
அடைகின்றேன்.
அரும்புக்கவி
அன்வர் உசேன்.