மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்க கல்விக் குழுவின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்க கல்விக் குழுவின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

அவனி மாடசாமி, முதுவை ஹிதாயத், பரம்பை இதயா பங்கேற்பு
மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
அவனி மாடசாமி, முதுவை ஹிதாயத், பரம்பை இதயா பங்கேற்பு
களிமங்கலம் :
மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் கல்விக் குழு சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 30.05.2026 சனிக்கிழமை மாலை வெகு சிறப்புடன் நடந்தது.
விழாவுக்கு மதுரை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் எஸ். முஹம்மது அப்துல் காதர் என்ற ஹக்கீம் தலைமை வகித்தார். மௌலவி ஹாபிழ் சையது சுலைமான் யூசுபி கிராஅத் ஓதினார்.
களிமங்கலம் முஸ்லீம் ஜமாஅத் தலைவரும், ஓய்வுபெற்ற டி.எஸ்.பியுமான எம். பாவா புகர்தீன் முன்னிலை வகித்தார். ஹாஜி. பி. இத்ரீஸ் பாவா வரவேற்புரை நிகழ்த்தினார்.
மதுரை இலக்கிய மன்றத்தின் நிறுவனர், அருந்தமிழ் நாவலர் ச. அவனி மாடசாமி அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் கல்வியின் சிறப்புகள் குறித்து விவரித்தார்.
துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், களிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு தேர்வில் எட்டாம் ஆண்டாக தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதற்கு தலைமையாசிரியர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இதற்கு அடித்தளமிட்டு வரும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் லெட்சுமிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் கல்விக் குழு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவது எதிர்கால சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு உறுதுணையாக இருந்து வரும் ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் எம். சையது அப்துல் சலாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
பரமக்குடி கவிஞர் இதயா, களிமங்கலம் கல்வி மங்கலமாக இருந்து வருவது பெருமையளிக்கிறது என்றார்.
தலைமையாசிரியர்கள் ராஜேந்திரபிரசாத் மற்றும் லெட்சுமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நன்கொடையாளர் பெயர்களை ஏ. சபீக் நைனாரும், மாணவர் பெயர்களை எம்.ஏ. சலீம் பாவாவும் வாசித்தனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர்களும், முதுவை ஹிதாயத்தின் தாயார் மூமினாள் பேகம் உள்ளிட்டோரும் வழங்கி கௌரவித்தனர்.
மதிப்புறு முனைவர் எம்.ஏ. ஜாபர் உசேன் மீரா விழாவினை சிறப்புடன் தொகுத்து வழங்கினார்.
ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் ஆர். சேக்மீர் நன்றியுரை நிகழ்த்தினார். விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.
12 ஆம் ஆண்டாக இந்த பரிசளிப்பு விழா நடைபெறுவது மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
















