இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய உள்ளரங்கம் திறப்பு விழா

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய உள்ளரங்கம் திறப்பு விழா

இளையான்குடி :
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மகளிருக்கென தமிழகத்தில் இரண்டாவது பெரிய உள்ளரங்கம் திறப்பு விழா 25.05.2026 திங்கட்கிழமை காலை நடந்தது.
விழாவுக்கு சிவகங்கை சம்ஸ்தானத்தின் மேதகு ராணி சாகிபா கௌரி வல்லப டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் ஜபருல்லா கான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரி தாளாளர் ஜபருல்லா கான் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
மகளிர் உள் விளையாட்டு அரங்கை கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளையின் சேர்மன் அல்ஹாஜ் எஸ்.எம். முஹம்மது யூசுப் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கல்லூரியின் மேனாள் முதல்வர்கள் பேராசிரியர்கள் எம். முகம்மது ஷிபிலி, ஹெச். நௌசாத் அலி, அப்பாஸ் மந்திரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர், செயலர் பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணாக்கர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







