இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அறிவியல் கழக நிறைவு விழா

அறிவியல் கழக நிறைவு விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அறிவியல் கழகம் மற்றும் இயற்கை கழகம் சார்பாக 04.04.2026 அன்று கழக நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. காலை நடைபெற்ற இயற்கை கழக நிறைவு விழாவில் கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, லேடி டோக் கல்லூரி, தாவரவியல் துறைத்தலைவி, ப்ரிசீலா ஸ்வீட்ளின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்வில் “டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வளாகத்தில் மருத்துவ குணமுள்ள தாவரங்கள்” என்னும் தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.
பிற்பகல் நடைபெற்ற அறிவியல் கழகம் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக மேலூர், அரசு கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், ஞானமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் அறிவியல் மற்றும் இயற்கை கழகம் சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக இயற்பியல் உதவிப்பேராசிரியர் காஜாமுஹைதீன் நன்றி கூறினார்.






