இராமநாதபுரம்

கலையரங்கம் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருள்மிகு சிதம்பர வள்ளி உடனமர் அருள்மிகு ஆதி இரத்தினேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக ஊரக வளர்ச்சித் துறை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் சார்பில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைகாசி விசாக வசந்த விழா வருகிற 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் கலையரங்கத்தை சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் உடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button