தலைவநாயக்கன் பட்டியில் கிராமசபை கூட்டம்

தலைவநாயக்கன் பட்டியில் கிராமசபை கூட்டம்
ராமநாதபுரம்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி மற்றும் ஏராளமான கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கமுதி அருகே கே.நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட
தலைவ நாயக்கன் பட்டியில் குடியரசு தின விழாவைமுன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்
கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம்
தீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து உட்பட கிராம பொதுமக்கள் 300 க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்வாக்காளர் விழிப்புணர்வு
உறுதிமொழி,தொழுநோய் விழிப்புணர்வு
உறுதிமொழி போன்றவை எடுக்கப்பட்டது. மேலும்
கிராம பொது மக்கள்
மகளிர் விடியல் பயண பேருந்து வசதி வேண்டியும், நூறுநாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கவேண்டியும் கோரிக்கை வைத்தனர். இதே போல்கீழராமநதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிர்வேல்
முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலர்
முத்துராமு தீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி உட்பட 300 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் வாக்காளர் விழிப்புணர்வு
உறுதிமொழி மற்றும் தொழுநோய்விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும்
கிராம பொதுமக்கள் அரசு உயர்நிலைப் பள்ளி அமைத்து தர
கோரிக்கைவைத்தனர்.
இதேபோல் கமுதி சுற்று வட்டார பகுதியில் உள்ள
பேரையூர், பசும்பொன்,
திம்மநாதபுரம், பெருநாழி,
நாராயணபுரம்,
கோவிலாங்குளம் உட்படஏராளமான ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது






