குடியரசு தின வாழ்த்துக்கள்
குடியரசு தின வாழ்த்துக்கள்
முடியாட்சி முடிந்து
குடியாட்சி மலர்ந்தது .
மன்னராட்சி மறைந்து
மக்களாட்சி மலர்ந்தது.
எழுபத்திஏழாம் ஆண்டு எழுச்சியுடன் மலரட்டும்.
இதற்காக உழைத்தவர்கள் இதயங்கள் மகிழட்டும்.
குடியாட்சி என்பது குடிமக்களுக்காக ,
குடி மக்கள் தேர்ந்தெடுத்த
குடிமகன்கள் ஆள்வது
குடிமக்களை அழிக்கும் குடியால் வரும் பணத்தில்
குடியாட்சி நடக்கும் நிலை
முடிவுக்கு வரவேண்டும்
இனம், மொழி, மதமென்ற இன்னபிற வேற்றுமைகள்
இனியேனும் மறையட்டும்
இந்த தேசம் உயரட்டும்.
தேசபக்தி , தெய்வபக்தி ,
தொழில் பக்தி கொண்டோரால்
தேசத்தின் வளர்ச்சியில் தேக்கநிலை மாறட்டும்.
தொழிலும் , விவசாயமும் தொய்வின்றி முன்னேறி
பொருளாதார நிலை பொலிவோடு வளரட்டும்.
பார்ப்போரைக்கவரும் நம் பண்பாடும் , கலாச்சாரமும்
பார் போற்ற விளங்கட்டும்
பாரதம் சிறக்கட்டும
எல்லைக்காகும் பணியில் இன்னரும் தியாகம்செய்த
வீரர்களின் புகழ்
விண்ணளவு ஓங்கட்டும் .
இத்தனையும் நடந்து
இத்தரணி போற்றுகின்ற
முத்தனைய நாடாக முன்னேற்றம் காணட்டும்.
எத்தனையோ மாந்தர்கள்
ரத்தம் சிந்தி பெற்ற ,
சுதந்திரமும், குடியரசும் காக்க
சூளுரைப்போம் இந்நாளில்.
வந்தே மாதரம். வாழ்க பாரதம்.
குடியரசு தின வாழ்த்துக்களுடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
26.01.2026