நான் அறுபட …….
நான் அறுபட …….
( 1207 ஆம் ஆண்டு செப்டம்பர் 30- ரூமி பிறந்த நாள் )
ஜலாலுத்தீன் ரூமி
மெதுவாக நடப்பது
உன் வழக்கம் போலும்….
ஒரு வன்மத்தை
வருடக் கணக்கில்
பற்றிக் கொண்டிருக்கிறாய்….
இத்தனை கனத்துடன்
எப்படி நீ
அடக்கத்துடன் இருப்பாய்?
இந்தப் பிணைப்புகளோடு
எங்கு நீ வருவாயென
எதிர்பார்க்கிறாய்?
ஓர் இரகசியத்தைக் கற்றுக்கொள்ள
காற்றைப்போல
விசாலமாக விரி…
இப்பொழுது நீ
களிமண்ணும் தண்ணீரும்
சரிசமமாகக்
கலந்த கலவை …
இப்ராஹீம் கற்றுக் கொண்டார்-
சூரியன் சந்திரன் மற்றும்
நட்சத்திரங்கள்
எப்படி மறைகின்றன என ….
நீ
மிகவும் பலவீனமானவன்…
அருளுக்கு உன்னை
ஒப்புக் கொடுத்துவிடு…
ஒவ்வோர் அலையும்
கரை சேரவே
கடல் அக்கறை
எடுத்துக் கொள்கிறது…….
உனக்குத்
தெரிந்திராத
உதவிகள் நிறைய
உனக்குத் தேவை….
நீ
கட்டுமான வேலைக்காக
தற்காலிகமாக
நிறுவப்பட்ட மேடையில்
வாழ முயற்சிக்கிறாய்…
பிஸ்மில்லாஹ்.. சொல்
இறைவனின் பெயரால்
ஒரு மிருகத்தை அறுத்திட
கத்தியைப்
பயன்படுத்துவதுபோல் …
உன் பழைய நானை
‘பிஸ்மில்லாஹ்’ வினால் அறு!
நன்றி : இனிய திசைகள் மாத இதழ் – செப்டம்பர் 2013

