இராமநாதபுரம்

பரமக்குடி இருசக்கர வாகன பேரணி

பரமக்குடி இருசக்கர வாகன பேரணி

ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் மாதம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. டூவீலரில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிதல், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவலர்கள் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை பரமக்குடி டிஎஸ்பி ஜெபராஜ் குடியரசு தொடக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஊர்வலம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button