சாயல்குடியில் ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் இளைஞரை சிக்க வைத்து வழிப்பறி செய்த கும்பல்!

சாயல்குடியில் ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் இளைஞரை சிக்க வைத்து வழிப்பறி செய்த கும்பல்!

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில், ஓரினச்சேர்க்கை தொடர்புடைய ஒரு மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி, ஒருவரை வலையில் விழ வைத்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். சாயல்குடி அருகே கோவிலாங்குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் லோன் வசூல் செய்யும் நபரிடம், ஆப் மூலம் தொடர்பு கொண்டு, சாட் செய்து, இருவேலி கண்மாய் அருகிலுள்ள ஒதுக்குப்புறத்துக்கு அழைத்துச் சென்று. அங்கு அவரை அச்சுறுத்தி, வாயில் மண் திணித்து தாக்கி, அவர் வைத்திருந்த ரூபாய், 30,000 பணமும், ஒரு செல்போனும் பறிக்கப்பட்டது. அந்த செல்போனை இரண்டாயிரத்திற்கு விற்று கணேசன் என்பவரின் Gpay மூலம் மூக்கையூர் உள்ள காதலிக்கு அனுப்பப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டநபர்சாயல்குடி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட கருணாமூர்த்தி, நோன்பகுளம், கணேசன், எம். கரிசல்குளம், முகமது அப்ரிடி, ஆராய்ச்சி நகர், முனீஸ்வரன், நோன்பகுளம், ஆகிய நான்கு பேர் சாயல்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், முகமது அப்ரிடி இதற்கு முன் இதே போன்ற வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர், போலீசார், இந்தக் குழுவினர் இதுபோன்று மேலும் யாரையும் ஏமாற்றியுள்ளார்களா என்பதற்காக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சாயல்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




