இராமநாதபுரம்

நவாஸ் கனி M.P தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்

நவாஸ் கனி M.P தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்

நவாஸ் கனி எம்.பி தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (02-12-2025) காலை 10 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக,
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ் எம் நாசர் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு செயலாளர் .E.சரவணவேல்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்

இந்த பொறுப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பரிந்துரை செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் முதன்மை செயல் அலுவலர் அஃப்தாப் ரசூல் இ.ஆ.ப., வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் அப்துல் சமத் MLA,.குலாம் முஹம்மது மெஹ்தி கான், A.S.பாத்திமா முஜப்பர் MC, A.மஹரிபா பர்வீன் MC, M.முகம்மது பஷீர் S.K.நவாஸ் மற்றும், வக்ஃபு வாரிய தலைமை நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button