இராமநாதபுரம்

கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு

கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை
பாலஸ்தீன காஸா இனப்படுகொலை எதிர்ப்பு குழு சார்பில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பைக் கண்டித்து அஸ்கர் (எ) செய்யது முஹம்மது தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் கீழக்கரை சமூக நல அமைப்புகள், எஸ் டி பி ஐ கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு பாலஸ்தீன காஸா இனப்படுகொலைக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.
அப்பாவி பாலஸ்தீன மக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசும், ராணுவமும் போராளிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும் மற்றும் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்து வருவதை பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.மேலும் இஸ்ரேலிய ராணுவத்தின் போர் குற்றத்தை உலக அளவில் மனித நேயம் நிறைந்த மாண்பாளர்கள் பல் வேறு கோணத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றார்கள், நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் முகைதீன் இப்ராகீம் தொகுப்புரை வழங்கினார்,முகம்மது ஜலீல் வரவேற்புரை ஆற்றினார்,முஹம்மது ஃபரூஸ்,முசம்மில் இப்ராகீம்,ஹமீது பைசல் கருத்துரையாற்றினார்கள், அஹமது நதீர்,செய்யது இப்ராகீம்,முஹம்மது நஃபில் ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்,
மௌலவி அல்ஹாபிழ் அபூபக்கர் சித்திக் உலவி இமாம் கதீப், பழைய குத்பா பள்ளிவாசல்,அப்துல் ரஹ்மான் மாநிலத் தலைவர்,வெல்பேர்க் கட்சி, தமிழ்நாடு,அப்துல் ஹமீது ,மாநிலத் துணைத் தலைவர் எஸ் டி பி ஐ கட்சி ,
தூத்துக்குடி சம்சுதீன் ,மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு, சிறப்புரையாற்றினார்கள்,கண்டன ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக சமூக ஆர்வலர் முஹம்மது அஜிஹர் நன்றியுரை கூறினார்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button