உழைப்பை நீயும் கைக்கொள்ள உன்னதமான வாழ்வு வரும்
உழைப்பை நீயும் கைக்கொள்ள உன்னதமான வாழ்வு வரும்
வாழ்க என்று வாழ்த்துவதாலோ
வீழ்க என்று வசை பாடுவதாலோ
வாழ்வதும் இல்லை வீழ்வதும் இல்லை அதனால் வளமும் சேர்வதும் இல்லை
இறைவன் எழுதிய தலையெழுத்தில்
எல்லாம் நம் உழைப்புஇருந்துவிட்டால்
வளமும் வாழ்வும் வந்துவிடும் வாழ்க என்றவர் வாழ்த்திய சொல் பலிக்கும்
துணிவு ஒன்றை கையில் எடுக்க
துணிந்து நாமும் செயல்படவே
அனைத்தும் நம் வசம் சேர்ந்து விடும்
அழகான வாழ்வு கிடைத்துவிடும்
உண்மை என்பதை கையில் எடுத்து
உணர்வுபூர்வமாய் வாழ்த்திடவே
நன்மை நலன்கள் சேர்த்து விடும்
நல்லவையாவும் வளர்ந்து வரும்
உண்மைதனையே கைக்கொண்டால்
உலகில் யாவையும் வாங்கிடலாம்
வன்மை தனையே நாம் கைகொள்ள வளங்கள் வாழ்விலென்றும் சேராதே
நேர்மைக்கு ஒரு மதிப்பிற்கும் நிம்மதி தானே வாழ்வில் நாளும் வந்திருக்கும் கலங்காத வாழ்வு கிடைத்துவிடும்
கடவுள் துணையும் நமக்கு கூட வரும்
அன்புடன் கவிஞர் ஜோதிடர் எழுத்தாளர் மகரிஷி (எ) மணிபாலன்