இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் தமுமுக மாவட்ட பொதுக்குழு

இராமநாதபுரத்தில் தமுமுக மாவட்ட பொதுக்குழு

இராமநாதபுரம் ஜுன்,2

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் பொதுக்குழு தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஹாஜாகனி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்வது,ஊராளும் மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது ஆகிய இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை,6 அன்று மதுரையில் தென் மண்டல மாநாட்டில் அதிகமானோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மற்றும் இராமநாதபுரம் நகரில் தமுமுக
கொடி ஏற்றப்பட்டது.பின்பு இராமநாதபுரம் வழுதூரில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் தங்கியிருக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு தமுமுக சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் இறுதியாக இராமநாதபுரம் மருத்துவ அணி சார்பில் கடந்த 2025 ஜனவரி முதல்
மே 30 வரை 58 பேருக்கு ரத்ததானம் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது மாவட்ட மருத்துவ அணிக்கு ஊக்க பரிசாக கேடயம் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button