ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் ரத்த தட்டணு முகாம்

ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் ரத்த தட்டணு முகாம்

ஷார்ஜா :
அமீரகத்தில் இயங்கிவரும் தன்னார்வ அமைப்பான கிரீன் குளோப் சார்பில் இரத்த தட்டணு தான முகாம் ஷார்ஜா முவைலா பகுதியில் இன்று ( 12.04.2026)காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அமீரக சுகாதார சேவை மைய இரத்த தான வங்கியில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பல கொடையாளர்கள் கலந்துகொண்டு இரத்த தட்டணு தானம் செய்தனர்.
இந்த நிகழ்விற்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.
மேலும் நமது உறுப்பினர்கள் ரசூல், தாஹிர்,பீர் முஹம்மது அப்துல் ரஹ்மான், சாபீர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பான ஏற்படுகளை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பீஸ் அன்ட் கேர் நிறுவனர் முஹம்மது ரபீக்,
முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத், கேப்டன் டிவி கமால், தீன் குரல் நஜீம், கீழை கம்யூனிட்டி செண்டரின் நிர்வாகி முஹம்மது ராசிக், நஜீர் ஜாபர்,தேஷ் குமார், மன்னை சுரேஷ், ஆரா அகாடமி ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்துகொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்த தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் உணவு, பழங்கள், தேநீர் வழங்கப்பட்டது.









