முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆக,26அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நிகழ்ச்சியினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி ஆயிர வைசிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் துவக்கி வைத்தார்.

உடன் நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி , நகர் மன்ற துணைத்தலைவர் குணா , நகர கழக செயலாளர் ஜீவரத்தினம் , நகர்மன்ற உறுப்பினர்கள் சதீஷ், சுகன்யா, வசந்தம், கல்யாணி, ராதா, பிரபா, கருப்பையா, மும்மூர்த்தி, தனலட்சுமி ஆயிர வைசிய சபை தலைவர் பாலுச்சாமி, துணைத்தலைவர் ராசி போஸ் உட்பட ஆசிரியர்கள், அனைத்து ஆயிரவைசிய சபை நிர்வாகிகள் மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர் இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.




