மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பரமக்குடி கோட்டாட்சியர் சரவண பெருமாள் தலைமையில், வட்டாட்சியர் ஸ்ரீராம்,மண்டல துணை வட்டாட்சியர் வேலவன் மற்றும் வருவாய்த்துறையினர் மண்டல மாணிக்கம் குண்டாற்றில் அரசு சார்பில் மணல் குவாரி அமைப்பதற்காக ஆய்வுக்கு வந்தனர்.இதனை அறிந்த மண்டலமாணிக்கம் கிராம மக்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மணல் குவாரி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் சென்ற வாரம் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் நிலவியதை தொடர்ந்து ஆய்வு மேற்க்கொள்ள முடியாமல் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.




