சீவி முடிப்பாய்!..
சீவி முடிப்பாய்!..
சிலபேர் பேச சிலபேர் பூச சிலர் சிலராய் மக்கள் மக்கள்
சிலபேர் கூச சிலபேர் காய்ச்ச சிலர் சிலராய் வாழ்வதே எங்கும் ..
சிலபேர் சிலபேர் சிலர் சிலராய் சிதைந்தது காட்சிகளாக்கும்..
சிலபேர் கிட்டார் சிலபேர் கிடைத்தார் சிலபேர் சிலசில பேறுகளாக..
உண்டார் சிலபேர் உடுத்தார் சிலபேர் கண்டார் சிலபேர் காணார் சிலபேர்..
கொண்டார் சிலபேர் கொடுத்தார் சிலபேர் மறந்தார் சிலபேர் மயக்கத்தில் சிலபேர்
உணர்வார் சிலபேர் ஓடார் சிலபேர் அப்படி சில பேர் அமைதியில் சிலசில பேரே!
பயின்றார் சிலபேர் பகையில் சிலபேர் பகுத்தார் சிலபேர் பகல்வார் சிலபேர்
சிலபேர் சிலபேர் சிலசில பேர் சிலையாய் சிலையாய் சிலசில பேர்கள்
உலையாய் உழைத்தும் தின்பார் சிலபேர் உண்ண மறந்தும் நடப்பார் சிலபேர்
உயர்ந்தில் சிலபேர் உறவில் சிலபேர் உறங்கிக் கிடந்து போவார் சிலபேர்
காணார் சிலபேர் காண்பார் சிலபேர் கொஞ்சும் சிலபேர் குழந்தையாய் சிலபேர்
கடமையில் சிலபேர் கதியாய் சிலபேர் கவலைகள் ஆள கிடப்பார் சிலபேர்!
சிலபேர் சிலபேர் சிரிப்பாய் நகைப்பாய் சிலபேர் சிலபேர் சிறப்பாய்க் களிப்பாய்!
சிலபேர் சிலபேர் விழிப்பாய் துவைப்பாய் சிலபேர் சிலபேர் சிந்தனை சீவி முடிப்பாய்!
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.