இராமநாதபுரம்

கடலாடி சேதுசீமை பட்டாளம் வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மினி மாராத்தான் போட்டி

கடலாடி சேதுசீமை பட்டாளம் வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மினி மாராத்தான் போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் சேதுசீமை பட்டாளம் இராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் நலச்சங்கம் 6 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் மாவீரர் திருப்பாண்டி அவர்களின் நினைவாக கடலாடி கிளை பயிற்சி மையத்தின் சார்பாக மாபெரும் மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள் 9 கி,மீ தூரம் கடலாடி யூனியன் ஸ்டாப் முதல் ஏ. புனவாசல் வரையிலும் பெண்கள் 5 கி.மீ தூரம் கடலாடி யூனியன் ஸ்டாப் முதல் ஏ, வேப்பங்குளம் வரையிலும் நடைபெற்றது. இதற்கு சேதுசீமை பட்டாளம் இராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் நலச்சங்கம் வீரர்கள் தலைமை தாங்கினர். காவல் துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முகேஷ் கடலாடி வட்டாட்சியர், அர்ஜீனன் உதவி இயக்குனர், முப்படை நல அலுவலகம், இளங்கோவன் காவல் ஆய்வாளர் கடலாடி, துரைப்பாண்டியன் NCC OFFICER, கோவிந்தராஜ் தலைமை ஆசிரியர், ஆனையாளர் கடலாடி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஐந்து நபர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு தொகை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. அதை போன்று 6 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தலா 3 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை போன்று போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சேதுசீமை பட்டாளம் பெயரில் விருது வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button