ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் & இஸ்லாமிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் கலந்து கொண்டார்கள். மேலும் ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐ எஃப் டி என் அறிமுக கூட்டம் மற்றும் கல்வி, பைத்துல் மால்,போதை விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது, இதில் அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு கொடுத்து அதன் மூலமாக மாநகர மாவட்ட நிர்வாகத்தை வலுவாக கட்டமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கியஸ்தர்களை தனித்தனியாக சந்தித்து ஐ எஃப் டி என் பற்றிய விழிப்புணர்வு கையேட்டை விநியோகிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.



