கவிதைகள் (All)
தரணி போற்றும் தமிழர் விழா!!! ————————————————-
தரணி போற்றும் தமிழர் விழா!!! —————————————————-
*ஓய்வின்றி உழைப்பவர்களின்
உழைப்பின் மேன்மையை
உலகிற்கே உணர்த்தும்
உழவர் விழா!
*பசிக்கின்ற வயிற்றோடு
கடும் உழைப்பை வெளிகாட்டி
புசிக்க உணவுதரும்
உயர்ந்த விழா!..
*வேறுபாட்டைக் களைந்து
உழைக்கும்மக்கள் இணைந்து
மகிழ்வோடு கொண்டாடும்
தமிழர் விழா!
*அன்பை பரிமாறும்
பொங்கல் நன்னாளில்
செங்கரும் வாழையும்
சேர்ந்து உறவாடும்
சிறப்பு விழா!
*புத்தரிசி புதுப்பானையில்
இஞ்சியும் மஞ்சளும்
கொஞ்சி விளையாடும்
இன்ப விழா!
*பயிர்களுக்குத் துணைநின்ற
கதிரொளிக்கும்
உயிர்உழவிற்கு உதவிசெய்த
காளைகளுக்கும்
நன்றி சொல்லும்
கலை விழா!
*தமிழர் பண்பாட்டைத்
தரணிக்கே உயர்த்திக்காட்டும்
தன்மானத் தமிழரின்
களிப்பூட்டும்
பெரும் விழா!
*பொங்கல் நாளைப் போற்றுவோம்!
உழவர்களின்பெருமையைக்
காட்டுவோம்!
*அனைவருக்கும் பொங்கல்
நல்வாழ்த்துகள்!!!!
முனைவர் சு.பாஸ்கர்,
தஞ்சாவூர்.