இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் தமுமுகவின் மாவட்ட நிர்வாக கூட்டம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் கருத்தரங்கம்

இராமநாதபுரத்தில் தமுமுகவின் மாவட்ட நிர்வாக கூட்டம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் கருத்தரங்கம்

இராமநாதபுரத்தில் தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் தலைமையில்
இராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமுமுக மமக மாவட்ட தலைவர்
வாவா ராவுத்தர்,
தமுமுக மமக மத்திய மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம்,
மேற்கு மாவட்ட தமுமுக, மமக மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட நிர்வாக கூட்டம்
நடைபெற்றது.மேலும் தலைமைத்துவ பண்புகள் என்ற தலைப்பில் மௌலவி ஹுசைன் மன்பஈ அவர்கள் சமூகப் பணியும் மனிதநேயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) மதுரை தென்மண்டல மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் செப்டம்பர்_21 இராமநாதபுரத்தில் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

2)இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்களுக்கு இடையூறாக பஸ்நிலையம் அருகில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வரும் மாதவன் நகர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் 6933 என்ற எண் கொண்ட மதுபான கடை குளிர்சாதன வசதி கொண்ட தனியார் பார் ஐ யும் வேறு இடத்திற்கு மாற்றக் கோரி..

தமுமுக சார்பில்
கடந்த 13- 02- 2021 பரமக்குடியில் வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்து 11.2.2021 பரமக்குடி நகர் முழுவதும் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதன் காரணமாக பரமக்குடி தாசில்தார் தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தை குழு எங்களை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியது.
எங்களுக்கு ஒரு இரண்டு மாத கால அவகாசம் கொடுங்கள் என்று கூறி அந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. அதன் காரணமாக அந்த முற்றுகை போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

ஜுலை 02 -2024 செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு பரமக்குடி காந்தி சிலை அருகில், 6933 எண் கொண்ட மதுபான கடை மற்றும் பார் ஐ யும் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட தனியார் பார் ஐ வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனநாயக ரீதியாக மக்கள் அடிப்படை உரிமை போராட்டத்தை நடத்தியும் போராட்டத்திற்கு செவி சாய்க்காத மாவட்ட நிர்வாகம்
டாஸ்மாக்கை கடையை அகற்றக்கோரி வருகின்ற ஆகஸ்ட் 24 -2025 மாலை 4 மணி அளவில் டாஸ்மாக் சாராயக் கடயை இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டத்தை தமுமுக தொண்டர் அணி சார்பாக மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமையில் கருப்பு_சட்டை அணிந்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள்,துணை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button