இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணம் வழங்கக்கோரி தமுமுக கோரிக்கை…!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணம் வழங்கக்கோரி தமுமுக கோரிக்கை…!

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை மேற்கு தெருவில் வசிக்கும் ஆமீனா அம்மாள் தனது வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தனர் கடந்த 16.04.2025 அன்று மாலை மின் கசிவு ஏற்பட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் உள்ள உடைமைகள், தங்க நகைகள் ரூபாய்18,500 ரொக்க பணமும், அவர்களின் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவை முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டு வீடு முழுவதும் சேதாரம் ஆகிவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமுமுக நிர்வாகிகளிடம் நடந்த நிகழ்வை கூறியதும் தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் அவர்களின் வழிகாட்டலின்படி 28.04.2025 தமுமுக
நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் நிவாரணம் வழங்க கோரி குடும்பத்தார்களின் சார்பாக தமுமுக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button