இராமநாதபுரம்

தியாகி வே. இமானுவேல் சேகரனார் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழாவில், தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், தமிழ்நா செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ்கனி, திருமதி ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கம், செ.முருகேசன், ஈ. ராஜா, திருமதி தமிழரசி, கிருஷ்ணசாமி, ஸ்டாலின் குமார், வி. முத்துராஜா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தாட்கோ தலைவர் இளையராஜா, மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவர் முருகவேல் ராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button