கவிதைகள் (All)
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வணக்கங்கள். அறிவினைப் புகட்டி
ஆற்றலை வளர்த்து
இனியவை கூறி
ஈகையை போதித்து
உலகியல் கல்வியை
ஊக்கமுடன் கற்பித்து
எதிர்பார்ப்புகள் இன்றி
ஏணியாய் செயல்பட்டு
ஐயங்கள் தீர்த்து
ஒப்பற்றவனாக்கி
ஓங்கு புகழ் பெறவைக்கும்
ஔடதமாய் விளங்கும்
ஆசிரியர் தம்மை
அகத்தில் இருத்தி
இருகரம் கூப்பி
வணங்குதல் செய்வோம்.
அவர் கற்பித்த படி
அகிலத்தில் வாழ்வதே
அவர்க்கு நாம் செலுத்தும்
அகமார்ந்த நன்றியாம்.
வாழ்க ஆசிரியர்கள்
வாழ்க அவர் நற்பணி.
அன்பு மாணவன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
05.09.2025.