கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீலாது விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மீலாது விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்
கலந்து கொண்டு கிராத் போட்டியில் மாணவர் மஹ்மூத் ரிழா முதல் இடத்தையும், வினாடி வினா போட்டியில் அஹமது ஷமில், முதல் இடத்தையும் , முஹம்மது யாஸிர் இரண்டாம் இடத்தையும் மற்றும் பேச்சு போட்டியில் அஹமது மீரான் இரண்டாம் இடத்தையும் வென்றார்கள்.
இம்மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியர் அப்சல் ஹுசைன் பட்டதாரி கணித ஆசிரியர் செயல்பட்டார், மேலும் போட்டியின் சாம்பியன்சிப் பட்டத்தையும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றனர்.செய்யது ஹமீதயா கல்லுரியின் முதல்வர் ராஜசேகர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் வெற்றி பெற்ற மாணவர்களையும் வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியருக்கு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.




