கட்டுரைகள்முதுகுளத்தூர்

சடைப்பக்கீர் யார்?

பலரும் கேட்கின்றனர் சடைப்பக்கீர் யார்?
இந்த கந்தூரி எதற்காக என்று?

கூனங்கான் சடைப்பக்கீர்/ மதகடி அம்மா கந்தூரி

கூனங்கான் வகையறாவில் நான்கு அண்ணன்மாருடன் உடன் பிறந்த இளம்பெண் தன் அண்ணன் மனைவியுடன் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தபோது விளையாட்டில் பிரச்சினை வருகிறது
கோபத்தில் அப்பெண் நிறைமாத கர்ப்பிணியான தன் அண்ணன் மனைவி வயிற்றில் முத்தை எடுத்து பலமாக வீசி விடுகிறார் இதில் அண்ணன் மனைவி மூர்ச்சையாகி விடுகிறார்
பயந்துபோன அப்பெண் கைக்குழந்தையான தன் அண்ணன் மகளையும் தூக்கிக் கொண்டு கண்மாய் மதகிற்குள் ஒளிந்து கொள்கிறார்
வீட்டிற்கு திரும்பி வந்த அண்ணன்மார்கள் தங்கையையும் குழந்தையையும் காணாது தேடி அலைகின்றனர் கிடைக்கவில்லை
நீண்ட தேடலுக்குப்பின் மதகின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர் ஒருவர்
மதகின் அடியே செப்புச் சலங்கை சத்தம் கேட்கிறது ஒரு சிறு பெண் குழந்தையின் சத்தம்
கேட்கிறது என்ற தகவலைச் சொல்கிறார்

மதகைச் சுற்றி தேடியும் யாரும் தட்டுப்படாததால் ஒர் ஈட்டியைக் கொண்டு மதகிற்குள் குத்த ஈட்டி அப் பெண்ணின் வயிற்றில் பாய்ந்து விடுகிறது
வலி தாங்காமல் அப்பெண் பெருங்குரலெடுத்து சாபமிட்டு துடிதுடித்து இறந்து விடுகிறாள்

அவசரப்பட்டு விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் அப்பெண்ணின் உடன் பிறந்தோரும் மனநிம்மதி இழந்து தவிக்கின்றனர்

தான் காட்டிக் கொடுத்ததினால் அப்பெண் கொலையுண்டு போனாள் என்ற குற்ற உணர்ச்சியில் அந்த இடையர் குடும்பமும் மனநிம்மதி இழந்து தவிக்கிறது

அப்பெண்ணின் சாபத்தாலே ஆடு மேய்க்கும் தொழில் விருத்தியாகவில்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர்

இச்சூழலில் பிரான்மலையிலிருந்து வழிப்போக்காக முதுகுளத்தூர் வந்தவர்தான் சடைப்பக்கீர் என்ற இறைநேசர்(சூஃபி)

வழிப்போக்காக வந்தவர் முதுகுளத்தூர் கண்மாய் பெரியமடை அருகே இருந்த கூனங்கான் தோப்பு கிணற்றடியில் தண்ணீர் குடித்து இளைப்பாறுகிறார்
தகவலறிந்த கூனங்கான் பங்காளிகள்
தங்கள் தோப்பில் தங்கியிருந்த இறைநேசரிடம் தங்கையின் மரணத்தால் தாங்கள் குற்ற உணர்ச்சியில் மனநிம்மதியற்று இருப்பது குறித்து முறையிடுகின்றனர்
அனைத்தையும் கேட்ட அவர் அந்த இடையர் குடும்பத்தையும் வரவைத்து இரு சமூகமும் இனைந்து இறைவன் பெயரால் கந்தூரி நடத்தி வாருங்கள் குற்ற உணர்வு குறைந்து நிம்மதி பெறுவீர்கள் என்று கூறிச் செல்கிறார்

அவர் பெயரால் இன்றுவரை இக்கந்தூரி சடைப்பக்கீர் கந்தூரி என்று பள்ளிவாசல் தெரு கூனங்கான் வகையறாவினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது

இறைநேசர் சடைப்பக்கீர் கூனங்கான் தோப்பில் வந்து தங்கிய இடத்தை மிசாகு பள்ளிக்கு வக்பு செய்து கொடுத்து விட்டனர் கூனங்கான் வகையறாவினர்

மதகடியில் அப்பெண் இறந்து போனதால் மதகடி அம்மா கந்தூரி என்றும் இதற்குப் பெயருண்டு.

நம் மண்னின் மத நல்லிணக்கத்திற்கான அடையாளம் இக்கந்தூரி என்பதையும் இணைக்கலாம்

வழிப்போக்காக வந்து வழிகாட்டிக் சென்ற இறைநேசர் சடைப்பக்கீர் அவர்களின் அடக்கத்தலம் திருநெல்வேலி பேட்டையில் அமைந்துள்ளது.

தகவல் :

ஜாஹிர் ஹுசைன் திவான்
+91 94439 19706

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button