தமிழ்நாடு

மேனாள் மாணவர்கள் நடத்திய கைப்பந்து போட்டி

மேனாள் மாணவர்கள் நடத்திய கைப்பந்து போட்டி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மேனாள் மாணவர்கள் நடத்திய 5வது கைப்பந்து போட்டி 27.01.2026 அன்று நடைபெற்றது. கல்லூரி செயலர் ஜபருல்லாகான் போட்டியை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டார். மாநில அளவில் பல்வேறு கல்லூரிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் சேலம், AVS கல்லூரி முதலிடம் பெற்றது. வேலூர், VIT கல்லூரி, இரண்டாமிடமும், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மூன்றாமிடமும், திருச்சி, புனித ஜோசப் கல்லூரி, நான்காமிடமும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், கல்லூரி மேனாள் மாணவர்கள் முகம்மது ஆரிப் மற்றும் அயூப் கான் ஆகியோர் வெற்றி கோப்பைகளை வழங்கி பாராட்டினர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் நன்றி கூறினார். நிகழ்வின் ஏற்பாடுகளை காஜாநஜ்முதீன் மற்றும் வெற்றி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button