இராமநாதபுரம்

பார்த்திபனூரில் லாரி மோதி மூதாட்டி பலி

பார்த்திபனூரில் லாரி மோதி மூதாட்டி பலி

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்ற கீழப்பெருங்கரையை சேர்ந்த மூதாட்டி ஒருவரை அந்தவழியே வந்த லாரி மோதியது.

இதில் கிழேவிழுந்தவர் மீது லாரி ஏறி இறங்கியது. தலை நசங்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அந்தவழியே வந்த பார்த்திபனூர் தமிழக வெற்றி கழக ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தனது துண்டைஇறந்த பெண்ணின் தலைமீது போர்த்தி காவல்துறையினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

லாரியின் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி கொண்டு செல்லப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button