இராமநாதபுரம்
ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 5 முனைச்சாலை அருகே பொது சுகாதாரத் துறையின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பாரதியார் பூங்கா நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. பரமக்குடி நகர்மன்றதலைவர் சேதுகருணாநிதி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் நகர்மன்ற துணைத்தலைவர் குணா , வடக்கு நகர்ச்செயலாளர் ஜீவரெத்தினம் , அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் சுகன்யா மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.





