இராமநாதபுரம்முதுகுளத்தூர்

சுற்று சூழல் விழிப்புணர்வு நிறைவு விழா

ஏழாம் நாள்: அக்டோபர் 2, 2025 (வியாழன்)
சுற்று சூழல் விழிப்புணர்வு & நிறைவு விழா
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஏழாம் நாள் நிகழ்வான இன்று 02.10.2025 சுற்று சூழல் விழிப்புணர்வு & நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து முதுகுளத்தூர் பேரூராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (திடக்கழிவு மேலாண்மை) M.கண்ணன் அவர்கள் சூற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார்கள். அதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கும், கிராம பொது மக்களுக்கும் திடக்கழிவு மேலாண்மை பற்றியும் அதன் பயன்பாடு நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் மூலம் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் நிகழ்வு , மக்கும் குப்பைகளிலிருந்து கிடைக்கும் உரம் தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்பட்டு மண்வளத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. தேவையில்லை என்று வெளியே போடும் கழிவுப்பொருள்களில் எரியக் கூடிய திடக்கழிவுகளை பிரித்து அதற்கெனதேவையில்லை என்று வெளியே போடும் கழிவுப்பொருள்களில் எரியக் கூடிய திடக்கழிவுகளை பிரித்து அதற்கென தொழில்நுட்பத்தின் வழியாக வடிவமைக்கப்பட்ட எரியூட்டி (உலைகள்) மூலம் எரித்துச் சாம்பலாக மாற்றலாம். எரிக்கபடும் போது வெளிப்படும் அதிக வெப்பம் நோய் தொற்றுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. மேலும் இந்த வெப்பத்தினைப் பயன்படுத்தி மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது, என்பதையும், இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் ஏற்படும் தீமைகளையும் அதன் குறைபாடுகளையும் விளக்கி இன்றைய காலகட்டத்தில் மீண்டும் மஞ்சள்பை பயன்படுத்த வேண்டிய தேவையையும் அதன் அவசியத்தையும் எதுத்து கூறி விளக்கினார்கள்.
நிறைவாக பள்ளியின் முதுகலை ஆசிரியர் காஜா முஹம்மது நன்றியுரை கூறினார்கள். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஷா. ஜஹாங்கீர் அவர்களுக்கும், பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி அவர்களுக்கும், முதுகுளத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் செ.சண்முகம் அவர்களுக்கும், முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் அ.ஷாஜஹான் அவர்களுக்கும், முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அ.செல்வராஜ் அவர்களுக்கும், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் நீ.மங்களநாதன் அவர்களுக்கும், பேரூராட்சி மன்ற 3 வது வார்டு கவுன்சிலர் இரா.மாரியம்மாள் அவர்களுக்கும், வட்டார கல்வி அலுவலர் அ.முருகேஸ்வரி அவர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.யாகம்மாள்மேரி அவர்களுக்கும், மு.வாகைக்குளம் கிராம தலைவர் க.ஆறுமுகம் அவர்களுக்கும்,முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சீ.காதர் முகைதீன் அவர்களுக்கும், கல்விக் குழு தலைவர் காஜா நஜுமுதீன் அவர்களுக்கும், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் காஜா கமருதீன் அவர்களுக்கும், பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் அ.பாசில் அமீன் அவர்களுக்கும், முதுகலை பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் காமிலா பானு அவர்களுக்கும், பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர் உசேன் அவர்களுக்கும், ஆங்கில வழி துணை முதல்வர் அவர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹுசைன், தமீம் அன்சாரி, கமால்பாட்சா அவர்களுக்கும், பள்ளியின் இருபால் ஆசிரிய பெருமக்கள், பள்ளியின் அனைத்து வகை அமைவுகளின் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் சிறப்பு முகாம் நடைபெற்ற 7 நாட்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அணைத்து சமுதாய பெரியவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கிராம இளைஞிகள், இளைஞர்கள் தாய்மார்கள் கிராம முதியோர்கள் துப்புரவு பணியாளர்களுக்கும் அணைத்து பத்திரிக்கை வகை ஊடக நண்பர்களுக்கும், காவல்துறைக்கும், பள்ளியின் காவலர் அவர்களுக்கும் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கும் நாட்டுக்கு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கும் திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்களுக்கும், அனைவருக்கும் பள்ளியின் நிர்வாகம் சார்பாக தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள் இனிதே விழா நிறைவடைந்தது. விழாவிற்கான அணைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button