1. Home
  2. வழக்கு

Tag: வழக்கு

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி நிலக்கரி ஊழல் வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி ரனு சஹு. இவர் அம்மாநில வேளாண்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, வேளாண்துறை இயக்குனராக பணியாற்றுவதற்கு…

ஆமையைத் தோற்கடிக்கும் மசூதி இடிப்பு வழக்கு

  ஆமையைத் தோற்கடிக்கும் மசூதி இடிப்பு வழக்கு   அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறக்கட்டளை கோவிலை கட்டுவதாகவும், ஐந்து கோபுரங்களுடன் 161 அடி உயரத்தில் கட்டுமானம் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்களாம்.   கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்திலிருந்து மீண்டும் அந்தப் பணி துவங்கியுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் கொரோனா நோய்த்தொற்றும், உயிரிழப்பும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையை கோவில் கட்டும் அறக்கட்டளை யோ, விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடியோ கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.   அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர் பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு நீதியின்பாற் பட்டதாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் தற்போது கோவில் கட்டும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படியென்றால், பாபர்  மசூதியை சட்ட விரோதமாக இடித்த வழக்கு என்னாயிற்று என்ற கேள்வி எழுவது இயல்பு.  அந்த வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1992ஆம் ஆண்டு  டிசம்பர்  6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை யும்  மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட சங்பரிவாரத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மசூதி இடிப்பிலும், அது தொடர்பான சதியிலும், அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியது. இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் அடக்கம். லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட பலர் மரணமடைந்து விட்டனர். அந்த கமிஷன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும், யார் மீதும் எடுக்கப்படவில்லை. மறுபுறத்தில் மசூதி இடிப்பு வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்மாதம் ஜூலை 24ஆம் தேதி எல்.கே. அத்வானி வாக்குமூலம் அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டு மென்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால்தான் நடக்கிறது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் வாக்குமூலம் பெறும் பணியே நடைபெறுகிறது என்றால், ஆமையை தோற்கடிக்கும் வேகத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவருவதை நாம் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய போக்கு நீதித்துறையின் மீதான மக்க ளின் நம்பிக்கையையும் தகர்க்கக் கூடியதாகும். (ஜூலை 22 தீக்கதிர் நாளிதழின் தலையங்கம்)

இடத்தகராறில் பெண் காயம்: 6 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூரில் இடத்தகராறு காரணமாக இரு குடும்பத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் பெண் பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை 6 பேர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதுகுளத்தூர் காமராஜர் நகரைச்சேர்ந்த திருநாகலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (36). அதே தெருவில் வசித்து வரும் காளி மகன் சுப்பிரமணி. இவருடைய…

சரணாலயத்தை பாதுகாக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை : ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. முதுகுளத்தூர் இளஞ்செம்பூர் செல்லத்தாய் தாக்கல் செய்த மனு: தமிழக வனத்துறை இணையதளத்தில், சித்திரங்குடி பறவைகள் சரணாலய சிறப்புகள் இடம் பெற்றுள்ளன.…

இளம்பெண் சந்தேக மரண வழக்கு: கொலை வழக்காக மாற்றம் : தந்தை கைது

முதுகுளத்தூரில் இளம்பெண் சந்தேக மரணம் தொடர்பாக போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கில் அவரது தந்தையே மகளை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை அவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வாசிபுரம் அருகே கதையன் கிராமத்தை சேர்ந்த அல்லிராஜன் மகள் திவ்யா (16).…

தகராறில் 5 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு மின்வயர் இழுப்பதில் தகராறு ஏற்பட்டதில் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவரது வீட்டுக்கு அரசு அனுமதியுடன் மின்சார இணைப்பு பெற்று…

தேர்தல் விதி முறை மீறல் வழக்கு

முதுகுளத்தூர், சாயல்குடி பகுதிகளில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தின்போது அரசு அனுமதியின்றி பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டி வந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மாவட்டம் முழுவதும் சுவற்றில் எந்தவித கட்சிக் கொடிகள் மற்றும் சின்னங்களை…

அனுமதியின்றி வாகனங்களில் கட்சிக்கொடி: வழக்குப் பதிவு

முதுகுளத்தூரில் சனிக்கிழமை அனுமதியின்றி வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் கட்டி வந்த 2 வாகனங்கள் மீது தேர்தல் விதி மீறியதாக முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் வரையக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான நந்தகுமார்…

முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதுகுளத்தூர் காந்தி சிலை அருகே திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேலின் கட்சி அலுவலகம் உள்ளது. இதன் சுவரில் கட்சி சின்னம் வரைந்த கொடிகள் மற்றும் புகைப்படங்கள் அழிக்கமால் இருந்ததாக…

வதைக்கும் விவாகரத்து வழக்குகள்

மௌலவி, அ. முஹம்மத கான் பாகவி   செ ன்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 2013 ஆகஸ்டுவரை15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன. விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைகள்மீதான உரிமை, மீண்டும்சேர்ந்துவாழ விருப்பம் ஆகிய வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன. இதில் நம்மை வதைக்கின்ற வேதனை என்னவென்றால், 2003ஆம் ஆண்டு விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை2,570ஆக இருந்தது. இது 2012ஆம் ஆண்டு 4,770ஆக உயர்ந்தது. 2013 செப்டம்பர்வரை மட்டுமே 3,500ஆக இவ்வழக்குகள் உள்ளன. இவ்வாறு இரு மடங்காக, மும்மடங்காக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. இந்த எண்ணிக்கைநீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள் மட்டுமே! நீதிமன்றம்வரை வராமல் சுமுகமாக முடிக்கப்படும் விவாகரத்துகள், பஞ்சாயத்துகளில்,அல்லது ஜமாஅத்துகளில் நடக்கும் விவாகரத்துகள் முதலானவற்றைக் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கில் இருக்கக்கூடும்; லட்சத்தைஎட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. முந்தைய தலைமுறையில் காணப்படாத இந்த அலங்கோலம், இன்றைய இளைய தம்பதியரிடையே பரவக் காரணமென்ன?இத்தனைக்கும் இந்த இளம் தம்பதியர் படித்தவர்கள்; பட்டம் பெற்றவர்கள்; பெரிய பணிகளில் கைநிறைய சம்பாதிப்பவர்கள்;வாழ்க்கை வசதிகளைக் குறைவின்றி அனுபவிப்பவர்கள்; திட்டம்போட்டு இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்பவர்கள். சுருங்கக்கூறின், எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி, முறுவல்… என எதுவும் இல்லை.ஆனால், பற்றாக்குறையே வாழ்க்கையாக மாறிவிட்டிருந்த முந்தைய தலைமுறையினரிடம் இந்த நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறைஇருந்ததில்லை. காரணம் என்ன? வாழ்க்கைப் பாடம்   படிப்பறிவு இல்லாத, அல்லது குறைவான படிப்பே இருந்த அம்மக்களிடம் பண்பாடு இருந்தது; நிதானம் இருந்தது. எதார்த்த வாழ்க்கைஎன்ன? குடும்பக் கௌரவம் என்ன என்பதையெல்லாம் அவர்கள் அறிந்திருந்தார்கள். குடும்பம் சிதறிவிடக் கூடாது; கட்டுக்கோப்புகுலைந்துவிடக் கூடாது என்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள்; கடமையில்லாத தைக்கூட இன்முகத்தோடுஏற்றுக்கொண்டார்கள் பள்ளிப் பாடம் இல்லையே தவிர, வாழ்க்கைப் பாடம் அவர்களின் விரல் நுனியில் இருந்தது. இன்றைய இளைய தம்பதியரிடையே மருந்துக்குக்கூட சகிப்புத் தன்மையைப் பார்க்க முடியவில்லை. சுயநலம் ஒன்றைத் தவிர,குடும்பத்தின் வேறு எந்த அடிப்படையும் அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றுவதில்லை. எதிலும் அவசரம்! எதையும் உடைத்துவிடும்வறட்டுத் துணிச்சல்! தன் சுகத்தைத் தவிர, எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் சிந்திக்காத ஏகாந்த நிலை! அவர்களின் ஏட்டுப் படிப்பு,பணம் சம்பாதிக்க உதவுவதைப் போன்று, சம்பாதித்த பணத்தில் நிம்மதியாக வாழ கற்றுக்கொடுக்கவில்லை. திருமணம்   முதலில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது, ஒரு வலுவானஒப்பந்தம்; அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்ற, நீடித்திருக்க வேண்டிய புனித இணைப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கை ஆகும். அதைஎளிதில் அறுத்தெறியக் கூடாது. “அவர்கள் உங்களிடமிருந்து வலுவானதோர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்” (4:21) எனத் திருக்குர்ஆனில் அல்லாஹ்குறிப்பிடுகின்றான். அதாவது கணவனை மனைவியுடன் பிணைக்கும் உறுதியான, மிக வலுவான ஒப்பந்தத்தைப் பெண்கள் தம் கணவன்களிடமிருந்துதிருமணத்தின் மூலம் பெற்றுள்ளனர். நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிநடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின்ஆணையின்பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா) ஆக, அல்லாஹ்வை முன்வைத்து செய்தகொள்ளப்பட்ட மண ஒப்பந்தத்தைப் பெரிதும் மதித்து நடக்க வேண்டும்! தகுந்த காரணமின்றிஅதை முறித்துப் போட்டுவிடலாகாது. தகுந்த காரணமே இருந்தாலும்கூட, இயன்றவரை முறிக்காமலிருக்க வழியேதேனும் உண்டாஎன்றே பார்க்க வேண்டும். இதனாலேயே, மணஒப்பந்தத்தை முறிக்கும் மணவிலக்கை (தலாக்), அனுமதிக்கப்பட்ட ஹலால்களிலேயே இறைவனுக்கு மிகவும்கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூதாவூத்) மணமுறிவு ஏன்?   முதலில், மணவிலக்கு என்ற எண்ணம் வந்ததனாலேயே அந்த முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதக் கூடாது. ஏதோ ஒரு மருட்சி;அல்லது அழுத்தம் அந்த எண்ணம் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். அதனால், அதற்குக் காரணம் என்ன என்று அலச வேண்டும். கணவனாகட்டும்; மனைவியாகட்டும்! மணவிலக்கு எண்ணம் பிறக்கக் காரணமாக அமைந்த அம்சங்கள் என்னென்னஎன்பதை நிதானமாக அசைபோட்டுப் பார்க்க வேண்டும். அதாவது பிரிந்துவிட வேண்டும் என்ற உந்துதல் தம்பதியருக்குப் பிறக்கத் தூண்டுகோலாக அமைந்த அகக் காரணிகள் என்ன? புறக்காரணிகள் என்ன என்று அமைதியாக யோசித்துப்பார்க்க வேண்டும். அக்காரணிகள் ஏன் இவையாக இருக்கக் கூடாது!…