1. Home
  2. தற்கொலை

Tag: தற்கொலை

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

முதுகுளத்தூரில் இளைஞர் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துராமலிங்கம் (25). இவர் முதுகுளத்தூர் மறவர் தெருவில் மனைவி பொன்னுகலாவுடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மனைவி வெளியூருக்கு சென்றிருந்த போது முத்துராமலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது…

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே கீழப்பணையடியேந்தலைச் சேர்ந்த இளம்பெண் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழப்பணையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (19). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகின்றன.…

முதுகுளத்தூர் அருகே 3 மகள்களை எரித்துக்கொன்று தாயும் தற்கொலை

ராமநாதபுரம், செப். 22– ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராமர் (38). இவர்களுக்கு செல்வி (18), பிரியா (16), பானு (10) ஆகிய 3 மகள்கள் இருந்தனர். செல்வி 12–ம் வகுப்பும், பிரியா…

தற்கொலை தீர்வாகுமா ?

தற்கொலை தீர்வாகுமா ?  அபுல் ஹசன் R 95977 39200 செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு…

இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்கள்

வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை எதிர்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டுவதுதான் இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களாக உள்ளது. தென்னிந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகின்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக இல்லத்தரசிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவல்…

எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம்  தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் என அந்த தனது…

தொடரும் தற்கொலைகள்..தீர்வு என்ன? – ஹூசைன் பாஷா, துபாய்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இரண்டு தற்கொலைகள் நம் கவனத்தை ஈர்த்து நம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.முதலாவதாக, நெல்லையைச் சேர்ந்த ஆஷிக் என்ற பல் மருத்துவர் மன உலைச்சல் காரணமாக தன்னைத் தானேகழுத்தை அறுத்து கொடூரமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.  இரண்டாவது, நாமக்கல்லைச் சேர்ந்தபஷீர் அஹமது என்ற பெரியவர் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளாததால்மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்துள்ளார்.   இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, அமீரகத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் ஒரு குடும்ப பெண்தாயகத்திலிருக்கும் தன் சகோதரர் மூலமாக தொடர்புகொண்டு உடனடியாக என்னுடைய கொடுமைக்காரகணவனிடமிருந்து மீட்டு என்னையும், குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பிவையுங்கள், இல்லையென்றால்தற்கொலையைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளதைப் பார்த்தால் மக்கள் மத்தியில்பிரச்சனைக்கு தீர்வு தற்கொலைதான் என்று பரவலாக பதிந்துள்ளதை காண முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தபெண்ணை சட்ட ரீதியாக மீட்டு தாயகத்திற்கு அனுப்புதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம்.   தற்கொலைகளையும், அவற்றிற்கான உணர்வுகள் மேலோங்காமல் தடுப்பதற்கான வழி முறைகள்என்னவென்பதையும் ஆராய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் அளவிற்குகொடூரமான இந்த செயலைக் குறித்து, ”உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்’ எனதிருக்குர்ஆன் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றது. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாதநிலைதான் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது.   உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடியாக தீர்வு வேண்டி மருத்துவரை அணுகக் கூடிய நாம், மன ரீதியானபிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் மன அழுத்தத்தில்இருந்தால் அதை கண்டறிந்து அதற்கான தீர்வை எடுப்பது நம் கடமை.35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில்மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நலஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது. தொடக்க நிலையில் உள்ள பிரச்சனைகளுக்கு மன நல ஆலோசகரிடம் சென்றால் கவுன்சிலிங் மூலம் பிரச்சனையைதீர்க்கலாம். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது என்பது மறுக்கமுடியாத உண்மை.சற்றே தீவிரமாகியுள்ள மன பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரைகளுடன் கூடிய ஆலோசனை தேவைப்படலாம்.நமது சமூகத்தில் இத்துறையில் நிபுணர்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.   குடும்பத்தினரால் கைவிடப் பட்டவர்களுக்கு மன ரீதியான ஆறுதலுடன் சேர்த்து பொருளாதார ரீதியானஒத்துழைப்பை அளித்து அவர்கள் நம்பிக்கையுடன் உலகில் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிகமான தற்கொலைகள் குடும்பப் பிரச்சனைகள் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. கணவன்,மனைவியிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஒருவொரை மற்றொருவர் புரிந்துக்கொள்ளாமை போன்றவையே முதற்காரணங்களாக இருக்கின்றன.   இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்க சமூக இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் மக்கள் மத்தியில்விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துவற்கு உடனடியாகஅனைத்து பகுதிகளிலும் ஏற்பாடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தற்கொலை இஸ்லாத்தில் தடை

( மவ்லவீ ஹாஃபிழ் பி.இஸட். பரகத் அலீ பாஜில் பாகவி, சென்னை – 10 ) “இன்னும் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிகக் கிருபையுடையோனாக இருக்கிறான்”. -அல்குர்ஆன் ( 4:29) தற்கொலை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பெருங்குற்றமாகும். ஹள்ரத் வாஹிதி (ரஹ்)…