தொடரும் தற்கொலைகள்..தீர்வு என்ன? – ஹூசைன் பாஷா, துபாய்

Vinkmag ad

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இரண்டு தற்கொலைகள் நம் கவனத்தை ஈர்த்து நம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.முதலாவதாக, நெல்லையைச் சேர்ந்த ஆஷிக் என்ற பல் மருத்துவர் மன உலைச்சல் காரணமாக தன்னைத் தானேகழுத்தை அறுத்து கொடூரமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.  இரண்டாவது, நாமக்கல்லைச் சேர்ந்தபஷீர் அஹமது என்ற பெரியவர் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளாததால்மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்துள்ளார்.

 

இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, அமீரகத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் ஒரு குடும்ப பெண்தாயகத்திலிருக்கும் தன் சகோதரர் மூலமாக தொடர்புகொண்டு உடனடியாக என்னுடைய கொடுமைக்காரகணவனிடமிருந்து மீட்டு என்னையும், குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பிவையுங்கள், இல்லையென்றால்தற்கொலையைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளதைப் பார்த்தால் மக்கள் மத்தியில்பிரச்சனைக்கு தீர்வு தற்கொலைதான் என்று பரவலாக பதிந்துள்ளதை காண முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தபெண்ணை சட்ட ரீதியாக மீட்டு தாயகத்திற்கு அனுப்புதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம்.

 

தற்கொலைகளையும், அவற்றிற்கான உணர்வுகள் மேலோங்காமல் தடுப்பதற்கான வழி முறைகள்என்னவென்பதையும் ஆராய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் அளவிற்குகொடூரமான இந்த செயலைக் குறித்து, ”உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்’ எனதிருக்குர்ஆன் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றது. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாதநிலைதான் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது.

 

உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடியாக தீர்வு வேண்டி மருத்துவரை அணுகக் கூடிய நாம், மன ரீதியானபிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் மன அழுத்தத்தில்இருந்தால் அதை கண்டறிந்து அதற்கான தீர்வை எடுப்பது நம் கடமை.35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில்மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நலஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது.

தொடக்க நிலையில் உள்ள பிரச்சனைகளுக்கு மன நல ஆலோசகரிடம் சென்றால் கவுன்சிலிங் மூலம் பிரச்சனையைதீர்க்கலாம். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது என்பது மறுக்கமுடியாத உண்மை.சற்றே தீவிரமாகியுள்ள மன பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரைகளுடன் கூடிய ஆலோசனை தேவைப்படலாம்.நமது சமூகத்தில் இத்துறையில் நிபுணர்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.

 

குடும்பத்தினரால் கைவிடப் பட்டவர்களுக்கு மன ரீதியான ஆறுதலுடன் சேர்த்து பொருளாதார ரீதியானஒத்துழைப்பை அளித்து அவர்கள் நம்பிக்கையுடன் உலகில் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிகமான தற்கொலைகள் குடும்பப் பிரச்சனைகள் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. கணவன்,மனைவியிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஒருவொரை மற்றொருவர் புரிந்துக்கொள்ளாமை போன்றவையே முதற்காரணங்களாக இருக்கின்றன.

 

இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்க சமூக இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் மக்கள் மத்தியில்விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துவற்கு உடனடியாகஅனைத்து பகுதிகளிலும் ஏற்பாடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

News

Read Previous

சென்னையில் ஒய். ஹ‌பீபுக்கு பேத்தி

Read Next

மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *