உலகம்

துபாயில் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம்

துபாயில் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம்

துபாய் :

இறை அருளால், தாய் மண்ணை விட்டு அமீரகத்தில் வந்து உழைக்கும் தொழிலாளர்களின் நலன் மீது அக்கறை கொண்டு, தொடர்ந்து அயராது பல்வேறு தொழிலாளர்கள் சார்ந்த சமூக நலப்பணிகளை செய்து வரும் க்ரீன் குளோப் அமைப்பின் முன்னெடுப்பாக, ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாகவும், தொழிலாளர்களை மகிழ்விக்கும் பொருட்டும் “ஷாபான் மாத உணவு விநியோகம்” நிகழ்வு 07.02.2026, சனிக்கிழமை மாலை, துபாய் அல்கூஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுமார் 2500 தொழிலாளர்களுக்கு உணவு (பிரியாணி) வழங்கப்பட்டது. இந்நிகழ்வு சிறப்பாகவும் சிறந்த முறையிலும் நடைபெற காரணமாக இருந்த அனைவருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், மேலும் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி சீராக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய உறுப்பினர்கள் ரசூல் ,சிந்தா, தாகிர், அப்துல் ரகுமான், மற்றும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. க்ரீன் குளோப் அமைப்பின் தலைவி ஜாஸ்மின் அபுபக்கர் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button