இராமநாதபுரம்
மரக்கன்று நடும் பணி தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரிபுரசுந்தரி அவர்கள் மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பத்மா, ஸ்ரீ மதி, ஆயிசா மற்றும் பச்சை குடை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.





