கட்டுரைகள்

குழந்தைகள் தின வாழ்த்துகள்…

குழந்தைகள் தின வாழ்த்துகள்…

சற்று தாமதமாய் குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்…
குற்ற உணர்வு மிஞ்ச மனதார வாழ்த்தத் தயங்கும் மனம்…

அடம்பிடிப்பது அடிப்படை குணமாய்ப் போன காலத்தின் கோலம்…
அலைபேசியும்
பொழுதுபோக்கிற்காக வந்த தொலைக்காட்சியும் அனைத்திற்கும் துணையாய்ப் போக
உண்ணவும் உறங்கவும் அதைத் துணையாய் கொண்ட பெரும் தாக்கம்…

பெற்றோர்களும் அதில் உழலும் அறியாமை…
குழந்தை நம்மிடம் கற்றுக் கொள்ளும் முதல் மூன்று வருடம்…
இந்த முதல் மூன்று ஆண்டில் முழு நேரமும் குழந்தைகளை அவர்கள் விருப்பத்தை அறிந்து ஆக்கப்பூர்வமாய் ஆரோக்கியமாய் மாற்ற முயல்வதுதான் சரியான முறை….
இல்லையேல்
நடப்பதை எதார்த்தமாய் ஏற்றுக் கொண்டு எந்த அழுத்தமும் இல்லாமல் இயல்பாய் கடந்து செல்வது சற்றே வாழ்க்கையை ஆசுவாசப்படுத்தும்…

இவை இரண்டையும் செய்ய இயலாமல் தவிக்கும் பெற்றோர்கள்
இரண்டரை வயதில் க்ரஷில் சேர்த்து மூன்று வயதில் பள்ளியில் சேர்த்து
ஆயிரமும் இலட்சமுமாய் செலவழித்துச் செய்வதறியாது பரிதவிக்கும் போட்டாபோட்டியின் உச்சம்…

ஏழு வயதுதான் பள்ளியின் ஆரம்பம் என்று நிர்ணயித்த ஃபின்லாந்துதான் கல்வியில் உலகத் தரத்தில் முதல் இடத்தில் இருக்கும் எதார்த்தம்…
கற்றுக்கொள்ள மூளை மூன்று வயதில் தயார் என்பது அறிவியல் பூர்வமாய் நிரூபிக்கப் பட்டாலும்…
அது வாழ்வியல் நடைமுறைகளையும் சரி தவறை பெற்றோரிடமும் பெரியவர்களிடமும் எந்த பாரபட்சமுமின்றி புரிந்து கொள்ள வேண்டிய வயதில்
சமுதாயத்தின் நடைமுறை அழுத்தத்தாலும் பாதுகாப்பின்மையின் தாக்கத்தாலும்
போட்டி மனப்பான்மையை வளர்த்து ஜெயிப்பது தான் வாழ்க்கை என்று ஆழமாய்ப் பதிய வைக்கும் பாவத்தின் பரிணாமம்…

பிஞ்சுக் குழந்தைகளைப் பஞ்சு போல் காக்க வேண்டிய எதார்த்தத்தைத் தவிர்த்து மனதைக் கல்லாக்கி தன் மன அழுத்தத்தையும் சேர்த்தே குழந்தைகளுக்குக் கொடுத்து இயல்பான வாழ்க்கையை இறுக்கமாய் மாற்றிய இயலாமையின் உச்சம்…

இதுவும் மாறும் மாற்றத்தை மீண்டும் பிறந்தால் காண்போம் இல்லையேல் இறைவனிடம் இறைந்து கேட்போம் குழந்தைகள் நலமாயும் வளமாயும் வளரட்டும்…

அனைத்து குழந்தைகளையும் ஆண்டவன் காக்கட்டும் பெற்றோர்களின் மன நிலையைச் சரி செய்ய இறைவன் இசையட்டும்…

உலகம் அன்று போல் அனைவரும் குழந்தைகளாகவும் குழந்தை மனதுடன் வாழ முயற்சிப்போம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button