கவிதைகள் (All)

விழித்திடு பசுங்கொடித் தோழா …!

 

சமுதாயத்திற்கு அரசியலை அறிமுகம்

செய்த உன்னை அசைத்துப் பார்க்கின்றனர்

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே

உன் கட்சிக்கு தனி இடமும் குணமும் உண்டு !

 

முஸ்லிம் லீக் எடுக்கும் முடிவை கேட்க

ஏங்கி நிற்கும் இந்தக் காலத்தில்

அதன் தொண்டும், துணிவும் கண்டு

எள்ளி நகையாடும் கள்ளர்களும் உண்டு !!

 

சிலர் கான்களின் அர்ச்சனை மழையில்

நனைந்து குதூகலிக்கின்றனர்

பலர் இங்கு தூண்களாய் நிமிர்ந்து

களப் பணியாற்றுவதை உணர மறுக்கின்றனர் !!

 

இட ஒதுக்கீடு எங்களுக்கு தந்திடு

என்று ஓயாமல் ஓசை எழுப்பும் இயக்கத்தை

எவராலும் ஒதுக்கிட முடியாது

என்பதை சமுதாயம் காண்கிறதே !!

 

கிடைக்கப் போகும் (இன்ஷா அல்லாஹ்) இட ஒதுக்கீட்டிற்கு

உரிமையை பொறுப்பேற்க உன்னைத்

தவிர வேறு யாருண்டு இங்கே?

மகிழ்ந்திடு பசுங்கொடி தோழா !!

 

கண்ணயர்ந்தால் நம்மை காணடிக்க

சில கூட்டம் கிளம்பியிருக்கிறது

விழித்திடு பசுங்கொடித் தோழா

முனீருல் மில்லத் கரம் பிடித்திடு தோழா !!

 

நன்றி : உலக வெற்றி முரசு ( 6-12, டிசம்பர் 2005 )

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button