இராமநாதபுரம்
அஞ்சலி

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பள்ளமோர்க்குளம் கிராமத்தில்
அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில்
கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு 21 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில்
அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக திருப்புல்லாணி மேற்குஒன்றிய மகளிர் அணி இணை அமைப்பாளர் திருமதி. கவிதா தலைமை தாங்கினார் கீழக்கரை நகர் செயற்குழு உறுப்பினர் திருமதி. நிஹாதா முன்னிலை வகித்தார். அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் விக்னேஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர்கள் மற்றும் அப்துல் கலாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார்





