துபாயில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாய்:
துபாயில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ என்கிற நூல் அறிமுக விழா இணைய வழியாக நடத்தப்பட்டது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் இலங்கை பிரதிநிதி காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் முன்னிலை வகித்தார். முகம்மது ஆதில் இறை வசனங்களை ஓதினார். முகுந்தன் மன்னர் மன்னர் திருக்குறள் வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவரும், தீயணைப்புத் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநருமான ஜனாப். மு. ஷாகுல் ஹமீது, சுதந்திர போராட்ட வீரர் கக்கன் பேத்தியும், தீயணைப்புத் துறை முன்னாள் கூடுதல் இயக்குநருமான மீனாட்சி விஜயகுமார், பரமக்குடியைச் சேர்ந்த கவிஞர் கே.ஏ. ஹிதாயத்துல்லா ( கவிஞர் இதயா), மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி, பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை தலைவர் ஏ.எஸ்.இப்ராஹிம், பேராசிரியை நசீமா, அழகன்குளம் கவிஞர் ஹைருன்னிஷா, கீழக்கரை அபுல் ஹசன், இலங்கை சுபையிர் அஹில் முஹம்மத், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் செ. மாதவன், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி மன்னர் மன்னன், அன்வர் பிசினஸ்மென் சர்வீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் உள்ள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நூல் குறித்த ஆய்வுரையை பகிர்ந்து கொண்டனர்.
நூலாசிரியரான கம்பம் மீரான் ஏற்புரையாற்றினார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தொகுப்புரையாற்றினார். இதில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







