கவிதைகள் (All)

சுதந்திர தினம்…

சுதந்திர தினம்…

ஒன்றுபட்ட இந்தியாவைத் துண்டாடிப் பின் மன்றாடி, திண்டாடிப் பெற்ற சுதந்திரம்…
அகிம்சை என்ற கோஷத்தோடு அரசியல் செய்து கோடிக்கணக்கான மக்களை நம்பவைத்த காந்தியம்…

அரசர்களை மிரட்டி அச்சுறுத்தி அடக்குமுறை கொண்டு வந்த கிழக்கு இந்திய நிறுவனத்தின் அராஜகம்…
ஜமீன்களால் பேரம் பேசி பாதியை மீட்டெடுத்து மீதியைத் தாரை வார்த்த சுதந்திரம்…

ஜமீன்களும் வியாபாரிகளும் தங்களை ஆங்கிலேயர்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள விடுதலை போராட்டத்தைத் தூண்டிய சுயநலம்…

பல பொதுநலவாதிகளையும் பொதுமக்களையும் பலிகொடுத்துப் பாதி நாட்டை தன் சுயலாபத்திற்கு மீட்டெடுத்து பின் ஐந்து வருடம் ஆட்சியில் சொகுசாக வாழ்ந்து தங்களுக்குச் சாதகமாக சட்டவரைவு செய்து அதை ஜனநாயகம் என்ற போர்வையில்
வாக்குரிமை தந்து சாதித்ததாய் பிரகடணப்படுத்தி ஏமாற்றிய அரசியல் சதித் திட்டம்…

மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஜனநாயகம் என்று சொல்லி ஒரு சில பொதுநலவாதிகளைத் தவிர ஜமீன்களாலும் வியாபாரத் தரகர்களாலும் தனக்கு சாதகமான ஜாதி மத அடவடியில் செல்வாக்கு கொண்டவர்களை அரசியல்வாதிகளாய் அறிமுகப்படுத்தி…

மக்களுக்கு சரியான ஆட்களை அடையாளம் காண முடியாது வார்த்தை ஜாலங்களாலும் மிரட்டல்களாலும் பணம் பெற்றும் கொண்டும் தேர்ந்தெடுக்க மட்டுமே வாய்ப்புகளை உருவாக்கிய அரசியல் அரிதி பெரும்பான்மை என்று வியாக்கியானமாய் பிரகடணப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய சூழ்ச்சி…
வெறும் இருபத்திநாலு சதவிகிதத்தை வைத்து அதுவும் பல ஜாதி மத கூட்டணி அமைத்து ஆண்ட மற்றும் ஆளும் அரசுகள்…
கட்சிகள் சார்ந்த ஜனநாயகம் சாதாரண மக்களுக்கு இந்த சுதந்திரத்திலும் இந்த ஜனநாயகத்திலும் எந்த பயனும் இல்லா நிதர்சனம்…

அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளையும் முதலில் களைய வேண்டும்…
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மருத்துவமும் கல்வியும் உரிமைகள் அனைத்தும் எளிதாய் கிடைக்க வேண்டும்…

இது நடக்கும் வரை சுதந்திரம் உயர் பிரிவினருக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பாயும்…
இடைநிலை மக்களுக்குக் கிடைத்தும் கிடைக்காத தவிப்புமாய்…
கடைநிலை மக்களுக்கு ஒரு பொருட்டாகவும் இல்லாமல் இருக்கும் பரிதாபம் …

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button