இராமநாதபுரம்
கமுதியில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதிமுக, பாஜகவினர் பங்கேற்று மூவர்ண கொடியுடன் நடத்திய பேரணி:
பயங்கரவாத அடக்குமுறையை கண்டித்து இந்தியாவின் சார்பில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையிலும், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படை வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் முன்னாள் படை வீரர்கள், அதிமுக மற்றும் பாஜகவினர் மூவர்ண கொடியுடன் பங்கேற்ற வெற்றி பேரணி கமுதி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.





