மாநிலஅளவிலான போட்டிக்கு தேர்வான அரசுபள்ளி மாணவி

மாநிலஅளவிலான போட்டிக்கு தேர்வான அரசுபள்ளி மாணவி

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி அக்க்ஷயா மாநில அளவில் நடக்கும் தட்டு எறிதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மாவட்டத்தில் இருந்து பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி உட்பட 8 குறுவட்டார அளவிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். முடிவில் முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி அக் ஷயா 19 வயது பிரிவில் தட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.அக்.,28ல் சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம், மாணவி அக் ஷயாவை தலைமையாசிரியர் நவின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பாராட்டினர்.




