கவிதைகள் (All)

இந்திய குடியுரிமை – கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்

இந்திய குடியுரிமை
                                  – கலைமாமணி கவிஞர் நாகூர்சலீம்
 
இந்தியன் என்கிற குடியுரிமை
இந்திய தாயின் மடியுரிமை
வாக்குரிமை நம் ஓட்டுரிமை
வல்லமை பாரத நாட்டுரிமை!
 
மண்ணின் மைந்தர் நாம் என்னும்
மகுடம் தரித்த பிறப்புரிமை
விண்ணின் உயரம் புகழ் விரிந்த
வினோத விசித்திர சிறப்புரிமை!
 
கண்ணிய பிரஜைகள் நாம் என்னும்
கவசம் ஜன நாயக வலிமை
அன்னிய ரல்ல நாம் என்னும்
அடையாளம் இதன் தனிப்பெருமை!
 
எண்ணி பெற்ற நம் சுதந்திரத்தின்
எழுச்சியைக் காப்பது நம் கடமை
கண்ணியம் ஐக்கியம் நம் பொதுமை
கனிவளச் சிறப்புகள் மிகப் புதுமை!
 
 

உன்னதச் சான்று வாக்குரிமை
உயிருக்கும் மேலாம் குடியுரிமை
திண்ணிய முகவரி தரும்! தரும்!
தூய பாரதம் ஜெயம்! ஜெயம்!


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button